முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பவளக்கொடி வடமோடி நாடகம் தொடக்கநிகழ்வு

பவளக்கொடி வடமோடி நாடகம் தொடக்கநிகழ்வு. முனைக்காடு நாகசக்தி கலைமன்றம் 2014 ஆண்டுக்கான கலைப்பயணத்தில் இந்தவருடம் அனுருத்திரன் (தென்மோடி) , பவளக்கொடி(வடமோடி) இரண்டு கூத்துக்களில் காலடி வைத்துள்ளனர். அந்தவகையிலே அனுருத்திரன் 15 - 12 - 2013 அன்று நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் தொடங்கி வைக்கப்பட்டது 21 - 12 - 2013 இன்று பவளக்கொடி வடமோடி நாடகம் தொக்கநிகழ்வு இடம்பெற்றது. இக்கூத்து முனைக்காட்டு கிராமத்தில் கடந்த 31 வருடங்களுக்கு முன்னர் அரங்கேற்றப்பட்டுள்ளது . அதன் பின் இந்தவருடம் முதன்முறையாக ஆடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அன்று ஆடிய கலைஞயர்களில் பலர் இன்று உயிரோடில்லை இருந்தபோதிலும் இக் கூத்தில் அல்லி பத்திரமேற்று நடித்த கலைஞயர் திரு. வே. மாசிலாமணி அவர்களின் வழிநடததலிலும், ஆலோசனையிலும் இன்று தொடங்கப்பட்டது. இக்கூத்தின் தலைமை அண்ணாவியாராக திரு ப. கதிர்காமனாதன் அவர்களும் உதவி அண்ணாவியாராக திரு .ப. உதயகுமார் அவர்களும் கடமையாற்றுகின்றனர்.

நாகசக்தி கலை மன்றம் 2014ம் ஆண்டிற்கான படைப்பாக னுருத்திரன் தென்மோடி கூத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு

படுவான்கரைப்பிரதேசத்தின் பாரம்பரியத்தை எடுத்தியம்பும் வகையிலும் எமது தமிழர் பாரம்பரியத்தின் பெருமை போற்றும் கலையாகிய கூத்து கலையை மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் ஒவ்வொரு ஆண்டும் பல கூத்துக்களை ஆடி அரங்கேற்றுவதுடன் கூத்துப் போட்டிகளில் கலந்து மாவட்ட மட்டம், மாகாண மட்டம் என வெற்றி பெற்று சாதனை படைத்துக்கொண்டு இருக்கும் நாகசக்தி கலை மன்றம் 2014ம் ஆண்டிற்கான படைப்பாக 2013.12.16ம் திகதி மு.ப.7.30 மணிக்கு நாகலிங்கேஷ்வரர் ஆலயத்தில் அனுருத்திரன் தென்மோடி கூத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. pmkalai