முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

"பசுமை நிறைந்த நாடு வளமான எதிர்காலம்" அதிமேதகு ஜனாதிபதியன் மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் மரநடுகைத்திட்டம்.

"மரம் ஒன்றை நடுவோம் பசுமையான உலகை காண்போம்" எனும் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் சிந்தனைக்கு அமைய நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மரநடுகை திட்டமானது இன்று ஆகும்.

பவளக்கொடி வடமோடிக் கூத்து சதங்கை அணிவிழா.

முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தினரால் வருடாவருடம் இடம்பெறுகின்ற ஆலய உறசவங்கள், சடங்குகளை முன்னிட்டு பாரம்பரிய வடமோடி , தென்மோடிக் கூத்துக்களை ஆற்றுகை செய்து வருவது வழக்கம். அந்த வகையிலே கடந்த கால ங்களில் அரிச்சந்திரன் மயாணகாண்டம், கும்பகர்ணன் வதை, சராசந்தன் போர், பப்பிரவாகன் நாடகம், நல்லதங்காள் நாடகம், பகாசூரன் சண்டை, உலகநாச்சி, நிர்முகன் வதை(தென்மோடி), அலங்காரரூபன் (தென்மோடி) போன்ற கூத்துக்களை மிகப்பிரமாண்டம்ன முறையில் கூத்தின் அடிப்படை பாரம்பரிய அம்சங்கள் பிரளாமல் ஆற்றுகை செய்துள்ளனர். 

அசேதன விவசாயத்தில் ஈடுபட்டு இன்று எல்லா உணவுப் பொருட்களிலும் நஞ்சித்தன்மை ஊடுருவி நஞ்சு கலந்த உணவை உட்கொள்கின்ற நிலை மாறி உள்ளது

மட்டக்களப்பு மாவட்டம் இயற்கை பயிர் செய்கையில் இருந்து குறுகிய காலத்திற்குள் அசேதன விவசாயத்தில் ஈடுபட்டு இன்று எல்லா உணவுப் பொருட்களிலும் நஞ்சித்தன்மை ஊடுருவி நஞ்சு கலந்த உணவை உட்கொள்கின்ற நிலை மாறி உள்ளது இதனால் எதிர்காலத்தில் எமது குழந்தைகளின் நிலை? நீரிழிவு, புற்று நோய் எனபல வகை நோய்தாக்கங்களுக்கும் உள்ளாக வேண்டி ஏற்படும். ஆகவே நாம் எதிர்கொண்ட ஆரோக்கிய மற்ற வாழ்கையில் இருந்து விடுபட்டு எதிர்கால எமது குழந்தைகளின் வாழ்வுக்காக அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் இதில் மிகுந்த ஆர்வம் கொண்டு செயற்பட்டு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும்.

பவளக்கொடி வடமோடி நாடகம் தொடக்கநிகழ்வு

பவளக்கொடி வடமோடி நாடகம் தொடக்கநிகழ்வு. முனைக்காடு நாகசக்தி கலைமன்றம் 2014 ஆண்டுக்கான கலைப்பயணத்தில் இந்தவருடம் அனுருத்திரன் (தென்மோடி) , பவளக்கொடி(வடமோடி) இரண்டு கூத்துக்களில் காலடி வைத்துள்ளனர். அந்தவகையிலே அனுருத்திரன் 15 - 12 - 2013 அன்று நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் தொடங்கி வைக்கப்பட்டது 21 - 12 - 2013 இன்று பவளக்கொடி வடமோடி நாடகம் தொக்கநிகழ்வு இடம்பெற்றது. இக்கூத்து முனைக்காட்டு கிராமத்தில் கடந்த 31 வருடங்களுக்கு முன்னர் அரங்கேற்றப்பட்டுள்ளது . அதன் பின் இந்தவருடம் முதன்முறையாக ஆடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அன்று ஆடிய கலைஞயர்களில் பலர் இன்று உயிரோடில்லை இருந்தபோதிலும் இக் கூத்தில் அல்லி பத்திரமேற்று நடித்த கலைஞயர் திரு. வே. மாசிலாமணி அவர்களின் வழிநடததலிலும், ஆலோசனையிலும் இன்று தொடங்கப்பட்டது. இக்கூத்தின் தலைமை அண்ணாவியாராக திரு ப. கதிர்காமனாதன் அவர்களும் உதவி அண்ணாவியாராக திரு .ப. உதயகுமார் அவர்களும் கடமையாற்றுகின்றனர்.

நாகசக்தி கலை மன்றம் 2014ம் ஆண்டிற்கான படைப்பாக னுருத்திரன் தென்மோடி கூத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு

படுவான்கரைப்பிரதேசத்தின் பாரம்பரியத்தை எடுத்தியம்பும் வகையிலும் எமது தமிழர் பாரம்பரியத்தின் பெருமை போற்றும் கலையாகிய கூத்து கலையை மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் ஒவ்வொரு ஆண்டும் பல கூத்துக்களை ஆடி அரங்கேற்றுவதுடன் கூத்துப் போட்டிகளில் கலந்து மாவட்ட மட்டம், மாகாண மட்டம் என வெற்றி பெற்று சாதனை படைத்துக்கொண்டு இருக்கும் நாகசக்தி கலை மன்றம் 2014ம் ஆண்டிற்கான படைப்பாக 2013.12.16ம் திகதி மு.ப.7.30 மணிக்கு நாகலிங்கேஷ்வரர் ஆலயத்தில் அனுருத்திரன் தென்மோடி கூத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. pmkalai

படுவான் கரை

                 வருவோரை வாவென்றழைத்து மகிழ்வுடனே இனிய மொழி பேசி வயிறாற உணவழிக்கும் தேசம் எங்கள் படுவான் தேசம். இது மட்டக்களப்பில் ஆட்சி புரிந்த மண்முனையை மையமகா வைத்தும் சூரியன் மறைகின்ற இடமாகவும் விளங்குவதால் மண்முனை ஆற்றுக்கு மேற்க்காக அமைந்துள்ள பிரதேசமே படுவான் கரை

படுவான்கரைப் பிரதேசம்

மட்டக்களப்பு வாவியானது மட்டக்களப்பு மாவட்டத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளதுடன் அது மட்டக்களப்பு பிரதேசத்தினை இரு பிரிவுகளாக பிரிக்கின்றது. வாவியின் மேற்குப் பகுதியிலிள்ள நிலப்பரப்பே படுவான்கரை பிரதேசம் என அழைக்கப்படுகிறது. மேற்குப் பகுதியில் சூரியன் படுவதால் (மறைவதால்) படுவான்கரை என்று அழைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. வாழ்வாதாரம் படுவான்கரைப் பிரதேசம் வளமிக்க விவசாய நிலத்தினைக் கொண்ட பகுதியாகும். அதனால் இப்பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் அதிகமாக விவசாயத்தினையே தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இங்கு அதிகமாக நெல் பயிரிடப்படுகிறது. மேலும் நிலக்கடலை , சோளம் , பயறு போன்ற தானியங்களும், பல மரக்கறி வகைகளும் இப்பிரதேசத்தில் பயிரிடப்படுகின்றன. மந்தை வழர்ப்பும் இப்பிரதேசத்தில் காணப்படும் சிறப்பம்சமாகும். இங்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவான காணிகள் இலங்கை அரசினால் மேய்ச்சல் நிலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு, மந்தை வழர்ப்பிற்கு அரச அங்கீகாரமளிக்கப் பட்டுள்ளது. படுவான்கரை பிரதேசம் வாவியினால் எல்லையிடப் பட்டுள்ளதுடன், பல ஆறுகளும் ஏரிகளும் படுவான்கரை பிரதேசத்தி