அசேதன விவசாயத்தில் ஈடுபட்டு இன்று எல்லா உணவுப் பொருட்களிலும் நஞ்சித்தன்மை ஊடுருவி நஞ்சு கலந்த உணவை உட்கொள்கின்ற நிலை மாறி உள்ளது

இது தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவூட்ட படுகின்ற போதும் இதனை கவனத்தில் கொள்கின்ற விவசாயிகள் குறைவாகவே காணப்படுகின்றது. ஆனாலும் இயற்கை விவசாயத்தை எவ்வாறு கடின உழைப்பு செய்தாயினும் அறிமுகப்படுத்தியாக வேண்டும் எனும் நோக்கின் அடிப்படையில் உக்டா நிறுவனம் வேள்விஷன் நிறுவனத்தின் வழிகாட்டலிலும், அணுசரனையுடனும் இயற்கை வேளாண்மை செய்கையையும், ஏனைய பயிர் செய்கையும் செய்து வரும் இந் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக முனைக்காடு உக்டா பண்ணையில் 2014.02.12ம் திகதி இடம்பெற்ற இயற்கை வேளாமைச் செய்கை அறுவடை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் கருத்து தெரிவித்தார். இந் நிகழ்வில் வேள்விஷன் நிறுவன பட்டிப்பளை முகாமையாளர் திரு.G.J.அணுராஜ் மற்றும் வேள்விஷன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் உக்டா நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக