படுவான்கரைப்பிரதேசத்தின் பாரம்பரியத்தை எடுத்தியம்பும்
வகையிலும் எமது தமிழர் பாரம்பரியத்தின் பெருமை போற்றும் கலையாகிய கூத்து
கலையை மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் ஒவ்வொரு ஆண்டும் பல
கூத்துக்களை ஆடி அரங்கேற்றுவதுடன் கூத்துப் போட்டிகளில் கலந்து மாவட்ட
மட்டம், மாகாண மட்டம் என வெற்றி பெற்று சாதனை படைத்துக்கொண்டு இருக்கும்
நாகசக்தி கலை மன்றம் 2014ம் ஆண்டிற்கான படைப்பாக 2013.12.16ம் திகதி
மு.ப.7.30 மணிக்கு நாகலிங்கேஷ்வரர் ஆலயத்தில் அனுருத்திரன் தென்மோடி
கூத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தினரால் வருடாவருடம் இடம்பெறுகின்ற ஆலய உறசவங்கள், சடங்குகளை முன்னிட்டு பாரம்பரிய வடமோடி , தென்மோடிக் கூத்துக்களை ஆற்றுகை செய்து வருவது வழக்கம். அந்த வகையிலே கடந்த கால ங்களில் அரிச்சந்திரன் மயாணகாண்டம், கும்பகர்ணன் வதை, சராசந்தன் போர், பப்பிரவாகன் நாடகம், நல்லதங்காள் நாடகம், பகாசூரன் சண்டை, உலகநாச்சி, நிர்முகன் வதை(தென்மோடி), அலங்காரரூபன் (தென்மோடி) போன்ற கூத்துக்களை மிகப்பிரமாண்டம்ன முறையில் கூத்தின் அடிப்படை பாரம்பரிய அம்சங்கள் பிரளாமல் ஆற்றுகை செய்துள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக