முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படுவான்கரைப் பிரதேசம்

மட்டக்களப்பு வாவியானது மட்டக்களப்பு மாவட்டத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளதுடன் அது மட்டக்களப்பு பிரதேசத்தினை இரு பிரிவுகளாக பிரிக்கின்றது. வாவியின் மேற்குப் பகுதியிலிள்ள நிலப்பரப்பே படுவான்கரை பிரதேசம் என அழைக்கப்படுகிறது. மேற்குப் பகுதியில் சூரியன் படுவதால் (மறைவதால்) படுவான்கரை என்று அழைக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

வாழ்வாதாரம்

படுவான்கரைப் பிரதேசம் வளமிக்க விவசாய நிலத்தினைக் கொண்ட பகுதியாகும். அதனால் இப்பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் அதிகமாக விவசாயத்தினையே தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இங்கு அதிகமாக நெல் பயிரிடப்படுகிறது. மேலும் நிலக்கடலை, சோளம், பயறு போன்ற தானியங்களும், பல மரக்கறி வகைகளும் இப்பிரதேசத்தில் பயிரிடப்படுகின்றன.
மந்தை வழர்ப்பும் இப்பிரதேசத்தில் காணப்படும் சிறப்பம்சமாகும். இங்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவான காணிகள் இலங்கை அரசினால் மேய்ச்சல் நிலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு, மந்தை வழர்ப்பிற்கு அரச அங்கீகாரமளிக்கப் பட்டுள்ளது.
படுவான்கரை பிரதேசம் வாவியினால் எல்லையிடப் பட்டுள்ளதுடன், பல ஆறுகளும் ஏரிகளும் படுவான்கரை பிரதேசத்தினூடாக வந்து வாவியில் கலப்பதால் விவசாயத்திற்கு அடுத்ததாக இங்கு மீன்பிடித்தல் கைத்தொழில் கணிசமான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பவளக்கொடி வடமோடிக் கூத்து சதங்கை அணிவிழா.

முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தினரால் வருடாவருடம் இடம்பெறுகின்ற ஆலய உறசவங்கள், சடங்குகளை முன்னிட்டு பாரம்பரிய வடமோடி , தென்மோடிக் கூத்துக்களை ஆற்றுகை செய்து வருவது வழக்கம். அந்த வகையிலே கடந்த கால ங்களில் அரிச்சந்திரன் மயாணகாண்டம், கும்பகர்ணன் வதை, சராசந்தன் போர், பப்பிரவாகன் நாடகம், நல்லதங்காள் நாடகம், பகாசூரன் சண்டை, உலகநாச்சி, நிர்முகன் வதை(தென்மோடி), அலங்காரரூபன் (தென்மோடி) போன்ற கூத்துக்களை மிகப்பிரமாண்டம்ன முறையில் கூத்தின் அடிப்படை பாரம்பரிய அம்சங்கள் பிரளாமல் ஆற்றுகை செய்துள்ளனர். 

நாகசக்தி கலை மன்றம் 2014ம் ஆண்டிற்கான படைப்பாக னுருத்திரன் தென்மோடி கூத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு

படுவான்கரைப்பிரதேசத்தின் பாரம்பரியத்தை எடுத்தியம்பும் வகையிலும் எமது தமிழர் பாரம்பரியத்தின் பெருமை போற்றும் கலையாகிய கூத்து கலையை மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் ஒவ்வொரு ஆண்டும் பல கூத்துக்களை ஆடி அரங்கேற்றுவதுடன் கூத்துப் போட்டிகளில் கலந்து மாவட்ட மட்டம், மாகாண மட்டம் என வெற்றி பெற்று சாதனை படைத்துக்கொண்டு இருக்கும் நாகசக்தி கலை மன்றம் 2014ம் ஆண்டிற்கான படைப்பாக 2013.12.16ம் திகதி மு.ப.7.30 மணிக்கு நாகலிங்கேஷ்வரர் ஆலயத்தில் அனுருத்திரன் தென்மோடி கூத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. pmkalai

அசேதன விவசாயத்தில் ஈடுபட்டு இன்று எல்லா உணவுப் பொருட்களிலும் நஞ்சித்தன்மை ஊடுருவி நஞ்சு கலந்த உணவை உட்கொள்கின்ற நிலை மாறி உள்ளது

மட்டக்களப்பு மாவட்டம் இயற்கை பயிர் செய்கையில் இருந்து குறுகிய காலத்திற்குள் அசேதன விவசாயத்தில் ஈடுபட்டு இன்று எல்லா உணவுப் பொருட்களிலும் நஞ்சித்தன்மை ஊடுருவி நஞ்சு கலந்த உணவை உட்கொள்கின்ற நிலை மாறி உள்ளது இதனால் எதிர்காலத்தில் எமது குழந்தைகளின் நிலை? நீரிழிவு, புற்று நோய் எனபல வகை நோய்தாக்கங்களுக்கும் உள்ளாக வேண்டி ஏற்படும். ஆகவே நாம் எதிர்கொண்ட ஆரோக்கிய மற்ற வாழ்கையில் இருந்து விடுபட்டு எதிர்கால எமது குழந்தைகளின் வாழ்வுக்காக அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் இதில் மிகுந்த ஆர்வம் கொண்டு செயற்பட்டு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும்.